சென்னை: மடிக்கணினி கோளாறை சரி செய்யாத நிறுவனம், வாடிக்கையாளருக்கு மடிக்கணினி
விலையுடன், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கோவை மாவட்டம், ஆலங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த வாசுகி தாக்கல் செய்த மனு:சென்னை, அண்ணா சாலையில் உள்ள கணினி விற்பனை நிறுவனத்தில், 37 ஆயிரத்து, 962 ரூபாய்க்கு, மடிக்கணினி வாங்கினேன்.சில மாதங்களில், கோளாறு ஏற்பட்டது. சேவை மையத்தினர் சரி செய்து கொடுத்தும், முழுவதுமாக கணினி இயங்கவில்லை. தயாரிப்பில் குறைபாடு உள்ளது என, சேவை மையத்தினர் கூறிவிட்டனர்.புதிய கணினி மாற்றி தர வேண்டும் என கேட்டும் தரவில்லை. புதிய கணினியுடன், எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில், கோரியிருந்தார்.இந்த வழக்கு, 2014ல் இருந்து நான்கு ஆண்டுகளாக நடந்து வந்தது.வழக்கு விசாரணையில், 'கணினி கோளாறு சரி செய்யப்பட்டது. மனுதாரர் ஆதாயம் அடையும் நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ளார். சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை. மனுதார ருக்கு புதிய மடிக்கணினி அல்லது மடிக்கணினிக்கு செலுத்திய, 37 ஆயிரத்து, 962 ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.