விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

சென்னை:தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க,
இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தேசிய விருது, ஜூனில் அறிவிக்கப்பட்டது. 'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...