வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - மீறினால் 10000 ரூபாய் அபராதம்!

ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்கும்படி
வருமானவரித்துறை அறிவித்துள்ளது. வருமானவரி கணக்கை அதற்குரிய நாளாக 31க்குள் தாக்கல் செய்வோருக்கு அபராதம் ஏதுமில்லை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

 ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்து டிசம்பர் 31க்குள் கணக்கு தாக்கல் செய்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அனாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை என்றும் வருமான வரி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் தவறான தகவல்களுடன் தாக்கல் செய்தாலும் தண்டனை மற்றும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...