1. நெல்லி வற்றல், பச்சைப்பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.
2. நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
3. அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
4. அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
5. கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
