National Cancer Institute நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் எரிக்கா லாப்ட்பீல்ட் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ஒரே நாளில் 7 அல்லது 8 முறை காபி குடித்தால் அதிக நேரம் நேரம் புத்துணர்வை அளிப்பது மட்டுமல்லாமல் மற்றுமொரு ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதில் குறைந்தது 10 ஆண்டுகள் வாழும் காலம் அதிகரிக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வாழும் பாதிக்கும் அதிகமானோர் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருப்பதால் அவர்கள் ஆய்வு எளிதில் முடிந்தாகவும்.
குறைந்தது ஒரு நாளில் ஒரு முறையாவது காபி அருந்துமாரு அறிவுறுத்தியுள்ளனர் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.
காபி பற்றி சிறு குறிப்புகள் :
காபி கொட்டை அல்லது தூள் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.
சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.