ஹேக்' செய்ய முடியாத புதிய இணையதளம் துவக்கம

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான
புதிய இணையதளம் நேற்று துவங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக, மேம்படுத்தப்பட்ட புதிய இணைய தளத்தை கலெக்டர் கதிரவன், நேற்று துவக்கி வைத்தார். இதில், டி.ஆர்.ஓ., சாந்தி, மாவட்ட தகவலியல் அலுவலர் சாதிக்அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட இணைய தள முகவரி https://krishnagiri.nic.in or https://krishnagiri.tn.nic.in ஆகும். இதில், மாவட்டத்தின் விபரங்கள், கிருஷ்ணகிரியின் பயண வழி, சுற்றுலாத்தலங்கள், துறைகள், அறிவிப்புகள், சேவைகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்பான செய்திக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு பக்கமும், ஆங்கிலத்திலும், உள்ளூர் மொழியிலும் வழங்கப்படுகிறது.


இது, வெளிப்புற தாக்குதல்கள், ஹேக்கர்கள், தேவையற்ற ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பானது. இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...