ஒரே நாளில் சளியை விரட்டும் அற்புதமான மருந்து

சளி என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் வரக்கொடிய நோய்,
இதற்க்கு பலரும் கடைகளில் விற்கும் மருந்துக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பக்க விளைவுகள் கூட வரலாம், சிலர் சளியை சாதரணமாக விட்டு விடுவார்கள். அது காலப்போக்கில் நெஞ்சு சளியாக மாறி அவரது உயிருக்கே ஆபத்து வர நேரிடலாம்.

ஆனால், இந்த சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி உள்ளது. அது தான் தேன் உறை இது உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது. இப்போது அந்த தேன் உறையை எப்படி செய்வதென்றும், எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.

தேவையான பொருட்கள்

சுத்தமான மலைத் தேன்
தேங்காய் எண்ணெய்
அரிசி மாவு
நேப்கின்
கட்டுத் துணி
ஒட்டக்கூடிய மருத்துவ டேப் (Adhesive Medical Tape)
செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் அரிசி மாவை போட்டு கையில் ஒட்டாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

தயாரித்து வைத்துள்ள கலவையை நேப்கின் மீது வைத்து, மார்பு பகுதியில் வைத்து, அதன் மேல் கட்டுத் துணியை போர்த்தி, ஒட்டக்கூடிய மருத்துவ டேப்பால் ஒட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இந்த தேன் உறையை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் மார்பு பகுதியில் ஒட்டி எடுத்து விட வேண்டும்.

பெரியவர்களுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இரவு முழுவதும் இந்த தேன் உறையை வைத்திருக்கலாம். குறிப்பு சளி அளவுக்கு அதிகமாக இருந்தால், தொடர்ந்து 2-3 நாட்கள் பின்பற்றுங்கள். இதனால் சளி முற்றிலும் வெளியேறிவிடும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...