சேலம் : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை
7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.
கருவி பழுது : சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலஅதிர்வை அளவிடும் சீஸ்மோகிராபி கருவி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் நிலஅதிர்வின் அளவு பதிவாகவில்லை.
தர்மபுரியிலும் நிலஅதிர்வு : சேலம் மாவட்டத்தை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் அருகே பெரும்பாலை, ஏரியூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
சேலத்தில் பாதிப்பில்லை : சேலத்தில் உணரப்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலஅதிர்வால் சேலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. நிலஅதிர்வு உணரப்பட்டால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். நெரக்கமான கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் இருக்க வேண்டாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை பேரிடம் கால உதவி எண்ணான 1077 ஐ தொடர் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.