*🛡தர்மபுரி நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். தர்மபுரி சந்தைபேட்டை நகராட்சி நடுநிலை பள்ளி, கடந்த 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது*
*🛡இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்தனர். தற்போது இப்பள்ளியை சுற்றி தனியார் மற்றும் கூடுதல் அரசு பள்ளி தொடங்கப்பட்டதால், இப்பள்ளிக்கு மாணவர்களின் வருகை படிப்படியாக சரிந்தது. தற்போது 90 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்*
*🛡1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சந்தைபேட்டை, டேகீஸ்பேட்டை, பாபா சாகீப்தெரு, குப்பாண்டிதெரு மாணவர்கள் படித்தனர். நடப்பாண்டிற்கான தீவிர மாணவர் சேர்க்கை நடந்தது*
*🛡இதில் 16 மாணவ, மாணவிகள் புதியதாக சேர்ந்துள்ளனர். புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு கதர் ஆடை அணிந்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்*
*🛡மேலும் ஊர்வலத்தின் ேபாது மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பள்ளியின் வளாகத்தில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு, நன்கொடையாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும்விழா நடந்தது*
