பறக்க முடியாத பறவை! நெருப்புக் கோழி குறித்த தகவல்கள்


1. பறக்க முடியாத நெருப்புக் கோழிதான் உலகின் மிகப்பெரிய பறவை.

2. நெருப்புக் கோழிகளுக்கு மூன்று வயிறுகள் இருக்கின்றன.

3. நெருப்புக் கோழிகள் மிக வேகமாக ஓடக்கூடிய நிலத்தில் வாழும் உயிரினம். ஒரு மணி நேரத்திற்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை நெருப்புக் கோழிகள்.

4. நிலத்தில் வாழும் மிருகங்களிலேயே, மிகப் பெரிய கண்களுடையது நெருப்புக்கோழி.

5. நெருப்புக் கோழிகளால் தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு வாழ முடியும். அதற்குப் பதிலாக, உணவுகளில் இருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும்.

6. ஒரு நெருப்புக் கோழியின் முட்டையின் எடை, மூன்று பவுண்ட். இரண்டு டஜன் கோழி முட்டைகளுக்கு ஈடானது, நெருப்புக்கோழியின் ஒரு முட்டை.

7. நெருப்புக் கோழிகளுக்கு மூன்று செட் கண் இமைகள் உள்ளன.

8. உலகில் நெருப்புக் கோழியின் வயது, 120 மில்லியன் வருடங்கள்.

9. நெருப்புக் கோழிகளும் வரிக்குதிரைகளும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக்கொள்ளும். நெருப்புக் கோழிகளுக்குப் பார்க்கும் திறன் அதிகம், வரிக்குதிரைகளுக்குக் கேட்கும் திறன் மற்றும் வாசனை திறன் அதிகம்.

10. நெருப்புக் கோழிகள், தங்கள் முட்டைகளை இரவுகளில் ஆண் கோழிகளும், பகலில் பெண் கோழிகளும் அடைகாக்கும்.

- ஆஸிஃபா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...