பள்ளி ஆசிரியையின் தலை துண்டிப்பு!


பள்ளி ஆசிரியையின் தலை துண்டிப்பு!
பள்ளி ஆசிரியையின் தலையை துண்டித்து விட்டு 5 கிலோ மீட்டர் தப்பி ஓடி வீசிய சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கப்ரசாய் துவக்கப்பள்ளியில் 30 வயதான சுக்ரா ஹெசாஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று (ஜூலை 3) பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டபோது, பள்ளிக்கு அருகில் வசித்து வந்த ஹரி ஹெம்பிராம் (26)என்பவர் திடீரென அங்குவந்து சுக்ராவை பிடித்து இழுத்துச் சென்றார்.

இதுதொடர்பாக, செராய்கெலா துணை காவல்துறை அதிகாரி அவினாஷ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில், அந்த நபரை தேடிய போது ஆசிரியையின் தலையை துண்டித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பள்ளிக்கு அருகில் வசித்துவருபவர் மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவருடைய பெயர் ஹரிஹெம்பிராம் என்றும் தெரிந்தது. அவர் தனது வீட்டிற்கு அருகில் சென்ற பிறகு தான் வைத்திருந்த வாள் கத்தியில் ஆசிரியையின்தலையை துண்டித்துள்ளார் . துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டு போலீசார் பிடித்து விடுவார்கள் என்று சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு காட்டுபகுதிக்கு ஓடியுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை விரட்டிச் சென்று கற்களை வீசியுள்ளனர். அவரிடம் இரண்டு வாள் கத்திகள் இருந்ததால் அவரை நெருங்க முடியவில்லை. பின்னர், போலீசார் அவரை சாதுரியமாக மடக்கிப் பிடித்து வாள்களைப் கைப்பற்றிய பின்னர், பொதுமக்கள் ஹரி ஹேம்பிராமை அடித்து நொறுக்கினர். அவரை மக்கள் சூழந்து கொண்டு தாக்கியதால் போலீசார் அவரை காப்பாற்றுவதற்கு சிரமப்பட்டுள்ளனர். இதில் சில போலீசாரும் காயமடைந்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஹரி ஹேம்பிராமுக்கு அங்குள்ள சதுர் மருத்துவமனையில் முதல் சிகிச்சைஅளிக்கப்பட்டு, பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பத்தை விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியதோடு, உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் பள்ளி அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட ஹரி ஹேம்பிராம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...