ஆன்லைனில் மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்!


ஆன்லைனில் மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்!
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், மேனுவலாக வழங்கக் கூடாது என்றும் தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பிறப்புகள் மற்றும் இறப்புகளுக்கான தலைமைப் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இயக்குநருமான குழந்தைசாமி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், வருவாய்த்துறை ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், டவுன் பஞ்சாயத்துகளின் இயக்குநர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு புதிய Common CRS மென்பொருள் மாநில அளவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மென்பொருள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும், அதிகாரபூர்வ சான்றுகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் மூலம் ஆன்லைனில் வழங்கப்படும். தற்போது, நடைமுறையில் இருக்கும் மேனுவலாக சான்றிதழ்கள் இனிமேல் வழங்கக் கூடாது. புதிய Common CRS மென்பொருள் மூலமே சான்றிதழ்கள் விநியோகிக்குமாறு பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...