கொட்டிக்கிடக்குது வேலை!பைசா செலவில்லாமல் சேர வாய்ப்பு...

பெ.நா.பாளையம்;அரசு பணிகளில் மட்டுமே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்த, கோவை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம், தன்போக்கை சற்று மாற்றி, தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, ஏராளமான வேலைவாய்ப்பை பைசா செலவின்றி, அள்ளி வழங்குகிறது. இதுநாள் வரை, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.
அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, கல்வித்தகுதியுள்ள நபர்களை, மூப்பு அடிப்படையில் தேர்வு செய்து அனுப்புவர். சமீபகாலமாக, அந்தந்த அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி, அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படுகின்றன. இதனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக பணியாளர்களை அனுப்பும் போக்கு குறைந்து விட்டது.

அதனால், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சோர்ந்து விடாமல், தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து சிறப்பு முகாம் நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது; படிக்காதவர்கள், ஐ.டி.ஐ., படித்தவர்கள் முதல் எம்.பி.ஏ., படித்தவர்கள் வரை, டிப்ளமோ உள்ளிட்ட தொழில் கல்வி படித்தவர்களும் பங்கேற்கலாம். இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்ததால், ஏராளமானோர் பங்கேற்றனர். பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்ததால், வாரந்தோறும் முகாம் நடத்தப்படுகிறது.
இதுதவிர, ஆளுமைத்திறனை மேம்படுத்த தொழில் முனைவோருக்கான திறன், பெண்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி, சுய தொழில் குறித்து ஊக்குவித்தல், வங்கி கடன் திட்டங்கள் மற்றும் வங்கி பணிக்கான போட்டித்தேர்வு, திருநங்கை நல்வாழ்வு, சுய வேலைவாய்ப்பு கடனுதவி திட்டங்கள் மற்றும் தொழிலக கொள்கை, போட்டித்தேர்வுகளை ஊக்குவித்தல், தணிக்கைத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து, அவ்வப்போது இலவசமாக சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வு எழுதுவதற்கு தேவையான பயிற்சி, தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாதிரி நேர்காணல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில், சுய வேலைவாய்ப்பில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு ஆட்டோமொபைல், கட்டுமானம், தொலைதொடர்பு, அழகுகலை, கால்நடைத்துறை, ஜவுளி உள்ளிட்ட, 21 பயிற்சிகள் பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.தனியாருடன் இணைந்து நடத்திய முகாம்கள் மூலம், நடப்பாண்டு, இதுவரை, ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது; கடந்த, 17 ஆண்டுகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
'பதிவு எண் ரத்தாகாது'
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஜோதிமணி கூறுகையில், ''வேலை தருவோர் மற்றும் வேலை தேடும் நபர்களை, நேரடியாக சந்திக்க வைத்து, வேலை தேடும் நபரின் கல்வி, அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம் குறித்து, நேர்காணல் நடத்தி, தேர்வு செய்யப்படுவர். யாரும் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 'தனியார்' வேலை பெறும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. ஏஜன்ட்களிடம் ஏமாறாமல் இருக்க, நடத்தப்படும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகுவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியில் சேர, இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...