மதுக்கடைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!


தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் இன்று (ஜூலை 9) காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே மக்கள் குடியிருக்கும் பகுதியில், புதிதாக மதுக்கடையைத் திறக்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தொடக்கம் முதலே இந்த பகுதியில் மதுக்கடையைத் திறக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி, ஊரணிபுரத்தில் புதிய மதுக்கடையை அரசு திறந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மதுக்கடையை மூட வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லணை கால்வாய் பாலத்தில் அமர்ந்து மாணவ மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டப் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...