இந்தியா முழுவதும் மூழ்கும் அபாயம்: அதிகாரப்பூர்வ எச்சரிக்கை!!


ஜூலை 10ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பரவலாக பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இப்படி நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்தது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில்,

வங்க கடலில் வடமேற்கு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிராவின் மத்தியப் பகுதி, சட்டிஸ்கர், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளிலும் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து,மணிப்பூர், மிசோரம்,திரிபுரா, ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள், ராயலசீமா, தமிழகம் மற்றும் கர்நாடகாவின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 3 முதல் 4 நாட்களில் சத்தீஸ்கர், மத்திய இந்திய பகுதிகள், வடக்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்.

மத்திய அரபிக் கடலில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் அலைகளின் உயரம் எழும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...