மிச்சம் மீதி இருந்தா போடுங்கய்யா., புண்ணியமா போகும்:- முன்னாள் டி.ஜி.பி

மும்பை: வீடு மற்றும் உணவகங்களில் மிச்சமாகும் உணவை சேகரித்து, பசியால் வாடும் மக்களுக்கு அதனை விநியோகித்து வரும் முன்னாள்
போலீஸ் டிஜிபியை பலரும் பாராட்டி வருகின்றனர். தொழிலதிபர் உதவி மஹாராஷ்டிர மாநில டிஜிபியாக இருந்து 2011ல் ஓய்வு பெற்றவர் டி.சிவாநந்தன். இவர், வீடு, உணவு விடுதி, கேளிக்கை விடுதி மற்றும் நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் உணவுகளை சேகரித்து, சாலையோரங்களில் உணவில்லாமல் பசியால் வாடும் ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். இதற்காக, அவர் மும்பையில் பிரபலமான டப்பாவாலாக்கள் உதவியுடன் ரொட்டி வங்கி என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இங்கு பணிபுரிபவர்கள், மிச்சமாகும், சப்பாத்தி, அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகளை மக்களிடமிருந்து வாங்கி, அதனை, 60 முதல் 90 நிமிடங்களில் விநியோகம் செய்து விடுகின்றனர்.


இந்த அமைப்பிற்கு, மும்பையில் பிறந்து லண்டனில் குடியேறிய நிதின் கனாபுர்கர் என்ற தொழிலதிபர், இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மக்கள் ஆதரவு இது தொடர்பாக சிவாநந்தன் கூறியதாவது: இந்தியா முழுவதும் தினமும் 1.8 லட்சம் டன் உணவுகள் வீணாகின்றன. ஆனால், மும்பையில் 20 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர். உணவகங்களில் மிச்சமாகும் உணவை, வெளியாட்களுக்கு கொடுப்பதில் சிக்கல் உள்ளதால், எங்களது தொண்டு நிறுவனம் மூலம் அதனை முறைப்படுத்தி வினியோகம் செய்கிறோம்.

ரொட்டி வங்கி அமைப்பிற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜிபிஆர்எஸ் சாதனம் பொருத்தப்பட்ட இரண்டு வேன்கள், உணவுகளுடன் மருத்துவமனை மற்றும் குடிசைப்பகுதியில் சுற்றி சுற்றி வரும். அங்கு தேவைப்படுவோருக்கு உணவு விநியோகம் செய்யப்படும். இதன் மூலம், ஏழை சிறுவர்கள் குற்றசெயலில் ஈடுபடுவது தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...