கனமழைக்கு வாய்ப்பு!

கனமழைக்கு வாய்ப்பு!
அடுத்த 24 மணி நேரத்திற்கான தமிழக வானிலை குறித்து
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வானிலை மைய இயக்குநர் தெரிவிக்கும்போது, “தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குழித்துறையில் தலா 10 செ.மீட்டர் மழையும், நாகர்கோவில் பகுதிகளில் 8 செ.மீட்டர் மழையும், இரணியல், குளச்சல், மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழையும், உளுந்தூர்பேட்டை, செங்கோட்டை, விருதாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தென் தமிழக பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திற்கும் அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும். இதனால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...