முருங்கை கீரை பொடி

முருங்கை கீரையில் இரும்பு சத்து நிறைய உள்ளதால் பெண்களின் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.


தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை -500
எள்-300
மிளகு- 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் -15
கல் உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கீரையை கழுவி சுத்தம் செய்து , ஒரு மணி நேரம் வெயிலில் நன்றாக காய வைத்து பின்பு 3 நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும் .அப்போது தான் அதில் நீர்பதம்( ஈர பதம்) சேராமல் இருக்கும்.

பிறகு, ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எள் , சீரகம் , மிளகு , மிளகாய் வற்றல் இவற்றை எண்ணெய் விடாமல் தனி தனியாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அனைத்து பொருட்களையும் ஆற விட்டு ,அதனுடன் கீரையை சேர்த்து அரைத்தால் முருங்கை கீரை பொடி தயார்.

குறிப்பு:

கல் உப்பையும் தனியாக வறுத்து ஆற விட்டு கடைசியாக பொடியுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சிறிது நெய் விட்டு சாதத்துடனோ , அல்லது இட்லி , தோசையுடன் கூடவோ வைத்து சாப்பிடலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...