குழந்தைகள் கடத்தல் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவதைக் கண்காணிக்க இணைய மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் தலைமையில் தனிக் குழுவை அமைக்கவும் உள் துறை அமைச்சகம் முடிவெடுத்தது. இதனைத்தொடர்ந்து, ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களிடம் கண்காணித்து வருகிறது உள்துறை அமைச்சகம்.
இந்த நிலையில், கவுகாத்தியில் சிறுமி ஒருவரின் முகப்புத்தகப் பதிவு அவரை உயிரையே காப்பாற்றியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது முகப்புத்தகத்தில் "நான் இன்று தற்கொலை செய்துகொள்ள போகின்றேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினை பார்த்த முகப்புத்தகப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், அச்சிறுமியின் இடத்தைக் கண்டறிந்து அம்மாநில காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் அசாம் காவல் துறையினர், சிறுமியைக் கண்டறிந்து அவரது தற்கொலை முயற்சியை முறியடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து அசாம் காவல் துறையினர் தங்களது முகப்பதக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
காவல் துறையினர் தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... 'தற்கொலைக்கு முயன்ற சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பான நிலையில் அவர்களது பெற்றோர்களுடன் உள்ளார்' எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் தற்கொலை குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் அளித்ததாகவும், தகவல் அளித்த ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நன்றி எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவர்களது குடும்பத்தாரின் பெயர்களையும், மற்ற தகவல்களையும் காவல் துறையினர் வெளியிடவில்லை
