இன்று வெளியான ஓப்போவில் என்ன புதுசு?


ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் எனும் மாடல் செல்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்திய செல்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் கடுமையாகப் போட்டிபோட்டு வரும் ஓப்போ தனது நிறுவனத்திலிருந்து கேமராவுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய புதுப்புது போன்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த லிஸ்ட்டில் ஃபைண்ட் எக்ஸ் எனும் புது மாடலை கடந்த ஜூன்19இல் பாரீஸில் அறிமுகம் செய்தது. அந்த போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3இல் இதன் விற்பனை தொடங்குகிறது. ஜூலை 25 முதல் இதை ஃப்ளிப்கார்டில் முன்பதிவு செய்யலாம்.

சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்,6.4 இன்ச் டிஸ்பிளே,8GB RAM,256 GB கூடுதல் மெமரி, குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 SoC,VOOC எனும் விரைவாக சார்ஜ் ஏறும் வசதி, கேமராவைப் பயன்படுத்திய பின் மூடிக்கொள்ளும் ஷட்டர் வசதி ஆகிய வசதிகள் இந்த மாடலில் உள்ளன. இதன் விலை சுமார்.ரூ.59,990. ஃப்ளிப்கார்டில் முன்பதிவு செய்பவர்களுக்கு ஃப்ளிப்கார்டின் ரூ.3000 வவுச்சரும் வழங்கப்பட இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...