சென்னை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிவிரைவு ரயில்கள் இனி அனைத்து ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் இன்று (ஜூலை 25) அறிவித்துள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நேற்று (ஜூலை 24) 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதில் மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கு காரணமாக, போதுமான ரயில்கள் இல்லாததும், கூட்ட நெரிசலுமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பயணிகள் தரப்பிலிருந்து தெரிவித்திருப்பதாவது; அரசு பேருந்து கட்டண உயர் வுக்கு பிறகு 20 சதவிகித பயணிகள் ரயில் பயணத்துக்கு மாறியுள்ளனர். அன்றாடம் வேலைக்குச் செல்லும் ஏழை, நடுத்தர மக்கள்தான் பெரும்பாலும் மின்சார ரயில்களில் செல்கின்றனர். ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படும்போது, ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கிறோம். தாமதமாக ரயில் வருவதால், அனைத்து நிலையங்களிலும் கூட்டம் அதிகரிக் கிறது. எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழலில், கடும் நெரிசலையும் பொருட் படுத்தாமல் பயணிக்கிறோம். எனவே, கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு, ரயில்சேவை அதிகரிப்பு போன்ற நடவடிக்கை களை தெற்கு ரயில்வே எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து பொது மக்களின் வசதிக்காக அதிவிரைவு ரயில்களும் இனி அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
