மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு: ஆகஸ்ட் 27-இல் கலந்தாய்வு

சட்டப் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி

. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது*


*பட்டப் படிப்பு தகுதிக்கான மூன்று ஆண்டுகள் எல்.எல்.பி. சட்டப் படிப்பு சேர்க்கையை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது*


 *முதல் கட்டமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை வரும் 27-ஆம் தேதி நடத்த உள்ளது*


*கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 719 பேர் விண்ணப்பித்திருந்தனர்*


*அதில் 123 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது*


*கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு தபால் மூலம் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன*


 *அழைப்பு கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும் கட்-ஆஃப் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது*


*மேலும் விவரங்களைwww.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...