வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வசூலிப்பு!


வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வங்கிகள் வசூலித்துள்ளதாகவும், அதில் எஸ்பிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4,988 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஜன்தன் யோஜனவின் மூலம் 30.8 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால், அவர்களிடம் இருந்தும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பிரதாப்சுக்லா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், 2017-18-ஆம் நிதி ஆண்டில் ஜன்தன் யோஜனவின் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4,988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...