மழைக்கு தாங்காத பள்ளி ரேஷன் கடைக்கு மாறியது!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மழைக்கு தாங்காமல் பள்ளி கட்டடம் ஒரு பகுதி இறங்கியதுடன்,
மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மாற்று கட்டடம் இல்லாததால், ரேஷன் கடைக்கு வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கருமாண்டகவுண்டனுாரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 1988 முதல் செயல்படுகிறது. இரு வகுப்பறை உள்ள கட்டடத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.

கட்டடம் சீரமைக்கப்படாததால், ஒரு வாரத்துக்கு முன், மழைக்கு தாங்காமல், கட்டடத்தின் ஒரு பகுதி, பூமிக்குள் இறங்கியதுடன் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்களின் பாதுகாப்புக்காக, தற்காலிக ஏற்பாடாக ரேஷன் கடைக்கு பள்ளி மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தில் போதிய வசதியில்லாததால், மழை சாரலில் நனைந்தபடி படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...