பெற்றோரில் ஒருவர் மட்டும் குழந்தை வளர்ப்பது ஆபத்தானது!
பெற்றோரில்
ஒருவர் மட்டும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது சமூகத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக மாறும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 10) தெரிவித்துள்ளது.
குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பாக நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மீறியதாக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை நடந்துவருகிறது. இந்த விசாரணையானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், பெற்றோர்களில் தந்தையோ அல்லது தாயோ ஆகிய இருவரில் ஒருவர் மட்டும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது குழந்தைக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருடைய அரவணைப்பும் குழந்தைக்கு தேவைப்படுகிறது. இருவரில் ஒருவர் மட்டும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது சரியல்ல. தாயின் அன்பைத் தந்தையோ, தந்தையின் அன்பைத் தாயோ ஈடு செய்ய முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒருவர் மட்டும் ஈடுபடுவது குழந்தையின் நடத்தை மாற்றங்களை உருவாக்கலாம். அது சமூகத்திற்கே கேடு விளைவிப்பதாக மாறலாம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நீதிமன்றம் குழந்தைகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழுள்ள தண்டனைகளுடன் ஆண்மை நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு வழங்கியிருந்துது. ஆனால் இவை அமைச்சகத்தினால் பின்பற்றப்படவில்லை எனக் கூறி அமைச்சகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.