உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன கலைஞர்


திமுக தலைவர் கலைஞரின் மறைவைத் தொடர்ந்து அவர் ட்விட்டரில் ட்ரெண்டாகி உலக அளவில் முதல் இடத்தில் உள்ளார்.

திமுக தலைவர் கலைஞருக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் #karunanidhiHealth, #kavueryHospital போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி முதலிடம் பிடித்தன.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) கலைஞரின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில் #karunanidhi, #kalainger, #kalaigerKarunanidhi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. கலைஞரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் #kalaingerdeath, #kalaingermarina, #Ripkalainger போன்ற ஹேஷ்டேக்குகள் உலக முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது.

கலைஞரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், பல்வேறு ஆளுமைகளும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.

ட்விட்டரில் கலைஞரின் பெயர் உலக அளவில் முதல் இடத்திலும், அவரின் இறப்பு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...