சென்னை: வெள்ளம் குறித்த எச்சரிக்கை!


சென்னையில் 306 இடங்களை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எனப் பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. இதில் 37 இடங்கள் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என்று எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நேரத்தில், சென்னையில் எந்தந்த இடங்களில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும் என தமிழ்நாடு தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியம் ஆய்வு மேற்கொண்டு, அதனை வரிசைப்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பேரிடருக்குப் பிறகு, மழை வெள்ளம் குறித்த அச்சவுணர்வு மக்களிடம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் மிக மிக பாதிப்படையும் இடங்கள், மிகவும் பாதிப்படையும் இடங்கள், மிதமான பாதிப்படையும் இடங்கள் மற்றும் குறைவான பாதிப்படையும் இடங்கள் எனத் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவைப் வைத்து இடங்களை வரிசைப்படுத்திள்ளது தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.

மிகப் பெருமழையின்போது தண்ணீரின் அளவு 5 அடிக்கும் மேல் இருந்தால் மிக மிக பாதிப்படையும் இடங்கள் எனவும், தண்ணீரின் அளவு 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் மிகவும் பாதிப்படையும் இடங்கள் எனவும், தண்ணீரின் அளவு 2 முதல் 3 அடி இருந்தால் மிதமான பாதிப்படையும் இடங்கள் எனவும், 2 அடிக்குக் கீழ் இருந்தால் குறைவான பாதிப்படையும் இடங்கள் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆய்வின்படி 37 இடங்கள் மிக மிக பாதிப்படையும் இடங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 24 இடங்கள் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களாகும். கிண்டி, வேளச்சேரி, மணப்பாக்கம், திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகள் மிக மிக பாதிக்கப்படும் இடங்களாகும் என்று தெரிவித்துள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 26 இடங்கள் வெள்ளத்தில் பாதிப்படையும் இடங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...