அதிரடி? அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர முதல்வர் பழனிசாமி முடிவு: முட்டுக்கட்டை போடும் மூத்த தலைவர்களை ஓரம்கட்ட திட்டம்???


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து, அமைச்சரவையிலும், அதிரடி மாற்றங்கள் செய்ய, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர் பழனிசாமி முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதற்கு முட்டுக்கட்டை போடும், மூத்த தலைவர்களையும் ஓரம்கட்ட,அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை, அமைச்சர்களாக இருப்பவர்களின் பதவி, எப்போது வேண்டுமானாலும், பறிபோகும் நிலைஇருந்தது. சதுரங்க விளையாட்டில், காய்களை வெட்டுவது போல, நினைத்த நேரத்தில், அமைச்சரவையை மாற்றி அமைப்பது,ஜெ., பாணி.

அமைச்சர் பதவி

அமைச்சரவை மாற்றம் என்பது, ஜெ.,க்கு பலமாகவும், பலவீனமாகவும் இருந்தது. அடிக்கடி நடந்த, அமைச்சரவை மாற்றம் காரணமாக, ஏராளமானோர் அமைச்சர் பதவி பெற்றனர்.எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோய் விடும் என்ற பயத்தில், ஜெ.,க்கு கட்டுப்பட்டு இருந்தனர். அவரது மறைவுக்கு பின், நிலைமை மாறி விட்டது. அமைச்சர்கள்
அனைவரும், முதல்வர் பழனிசாமியின் கட்டுப் பாடின்றி, தனித்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால், அவர்கள், அசைக்க முடியாதவர்களாக உள்ளனர்.

ஆரம்பத்தில் அடக்கி வாசித்த, முதல்வர் பழனி சாமி, தற்போது, ஜெ., பாணியில் செயல்பட துவங்கி உள்ளார். ஜெ.,க்கு அளிக்கப்படும் அதிகபட்ச பாதுகாப்பை, தனக்கும் வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.ஜெ., வரும் போது, கட்சி நிர்வாகிகள் குனிந்து வணங்குவது போல, பழனி சாமியையும் வணங்கத் துவங்கி விட்டனர்.முதலில் அதிகாரிகளை இட மாற்றம் செய்யவே சிரமப் பட்டார். அவர் விரும்பிய அதிகாரிகளை,இட மாற்றம் செய்ய, தலைமை செயலர் ஒப்புதல் அளிக்க மறுத்தார்.தற்போது, நிலைமை மாறி விட்டது.


முதல்வர்உத்தரவின்படி, அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படுகின்றனர். சமீபத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 12 பேர், மாற்றம் செய்யப்பட்டனர். சில தினங்களுக்கு முன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 32 பேர், ஒரே நேரத்தில் மாற்றப்பட்டனர்.அதன் தொடர்ச்சி யாக, அமைச்சரவையிலும் சில மாற்றங்களை செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, அமைச்சர்கள் இடையே கலக்கத்தைஏற்படுத்தி உள்ளது.

தீவிர ஆலோசனை

இது குறித்து, முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:அதிகாரிகளை மாற்றியது போல், அமைச்சரவையையும் மாற்றி அமைக்க,
முதல்வர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அமைச்சர்களை மாற்றினால், தேவையில்லாத சச்சரவுகள் எழும் என, மூத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.அவர்களை ஓரம்கட்டவும், அரசின் செயல்பாட்டை துரிதப் படுத்தவும், முதல்வர் பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.அதற்கு காரணம், சில அமைச்சர்களை மாற்றினால் தான், அரசின் செயல்பாடுகள் வேகம் பெறும் என்றும், பொது மக்களிடத்தில் உள்ள அதிருப்தி மாறும் என்றும், உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்குள்,அதை செய்து முடிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.இதுபற்றி, தனக்கு வேண்டிய அமைச்சர்களுடன், முதல்வர் ஆலோசித்து வருகிறார். அமைச்சர்களை மாற்றுவதா அல்லது அமைச்சர்களின் துறைகளை மட்டும் மாற்றுவதா என,ஆலோசனை நடந்துள்ளது. இதில் ஏதேனும் ஒன்று, விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்தவட்டாரங்கள் கூறின.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...