தேசிய கொடி எரித்தால் மூன்றாண்டு சிறை'!

சென்னை:'தேசிய கொடியை எரித்தால், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்'
என, சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தேசிய கொடியை எரித்தல், சிதைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது, காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அந்த காகிதத்தாலான கொடிகளை, நிகழ்ச்சி முடிந்த பின், தரையில் போடக்கூடாது; துாக்கியெறியக் கூடாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...