தேவைக்கும் அதிகமான இன்ஜினியர்களை உருவாக்குவதால் வேலைவாய்ப்பு பிரச்னையாக உள்ளது: அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா பேச்சு


தேவைக்கும் அதிகமான இன்ஜினியர்களை உருவாக்குவதால் வேலைவாய்ப்பு
பெரும் பிரச்னையாக உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பேசினார்*


*சென்னை ஐஐடியில் பான் ஐஐடி லீடர்ஷிப் சீரீஸ் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப திறன் போட்டிகள் நேற்று தொடங்கியது*


 *இதன்துவக்க விழா நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது*



*இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்க தனியாருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில பல்கலைக்கழகங்களின்கீழ் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் கல்வி செயல்முறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன*

*போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை, அவ்வாறு ஆசிரியர்கள் இருந்தாலும் போதுமான கல்வித்தகுதி பெற்றிருப்பதில்ைல. உள்கட்டமைப்பு வசதிகள்  இல்லை.இந்த இன்ஜினியரிங் கல்லூரி நிறுவனங்கள் எவ்வாறு ஐஐடி போன்ற சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக இருக்க முடியும்*


 *இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களின் பெருக்கம், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவைக்கும்  அதிகமாகவே நாம் இன்ஜினியர்களை உருவாக்கி வருகிறோம். இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அரசின்கீழ் செயல்படும் எந்த நிறுவனமும் இதில் தலையிட முடியாத சூழல் உள்ளது*


 *கண்மூடித்தனமாக இன்ஜினியரிங்  கல்லூரிகளை திறக்க அனுமதி கொடுத்ததே இதற்கு காரணம். 10 லட்சத்துக்கும் அதிகமான இன்ஜினியர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்*



 *நம்முடைய பொருளாதார வளர்ச்சியில், தொழிற்துறைகளால் எல்லா இன்ஜினியரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. இந்த இன்ஜினியர்களை நம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தயார்ப்படுத்தும்  நிலையில் நாம் இல்லை*


*அரசும், இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் அமைப்புகளுக்கு இதுதொடர்பாக எச்சரிக்கவில்லை. 2003ம் ஆண்டு அல்லது அதற்குபின் யு.ஆர்.ராவ் கமிட்டி அரசை எச்சரித்தது*


 *குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது  இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இணைவு வழங்குவதை நிறுத்த அறிவுறுத்தியது. அத்துடன் ஒரு லட்சம் இந்தியர்களில் 15 பேர் இன்ஜினியர்கள் என்றும் எச்சரித்தது*


 *நமக்கு எவ்வளவு இன்ஜினியர்கள் தேவை என்று நமக்கு  தெரியாது. தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளில் எவ்வளவு பேர் வேலைக்கு தேவை என்பதை கண்டறிய சர்வே ஏதும் நடத்தப்படவில்லை. அதேபோல், ஒவ்வொரு இன்ஜினியரிங் துறையிலும் எவ்வளவு வேலைவாய்ப்பு  உருவாகிறது என்றும் தெரியாது*


*ஆனால் அதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு வரை இன்ஜினியரிங் கல்லூரிகள் எண்ணிக்கையும், அங்கு படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்தது*


 *ஆனால் கடந்த 4 ஆண்டுகளில்,  ஏற்கனவே படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் இன்ஜினியரிங் கல்லூரிகளில் போதுமான மாணவர்கள் சேரவில்லை. பல இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படித்த நம் மாணவர்களுக்கு  வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக உள்ளது*


*இந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, போதுமான பணித்திறன் இருக்குமா என்பது கேள்விக்குறியே*


*இந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் வேறு கல்லூரியில் எம்.இ அல்லது  எம்.டெக் படித்து விட்டு ஆசிரியர்களாக வருகிறார்கள். அவர்கள் இன்ஜினியரிங் பாடத்திட்டதை சொல்லித்தருவதற்கு போதுமான தகுதியுடையவர்களாகவும் இருப்பதில்லை*


*அதே போல், பாடத்திட்டத்ததை மேம்படுத்த வேண்டும் என்று அரசியல்வாதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பல துறையை சேர்ந்தவர்களும் பேசுகிறார்கள்*


 *அவர்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தை  மாற்ற முடியாது. அடிப்படை இன்ஜினியரிங் கல்விக்கான பாடங்களை எப்போதும் மாற்ற முடியாது*


*இப்படிப்பட்ட சூழலில் இருந்து மாற்றி தொழில்துறைக்கு தேவையான தகுதிகள் உள்ள மாணவர்களை உருவாக்கும் வகையில் நம் இன்ஜினியரிங் கல்வியை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு சூரப்பா பேசினார்*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...