பாட புத்தகத்தில் நடிகர் படத்தால் சர்ச்சை!


புதுடில்லி: மேற்கு வங்க மாநில பாட புத்தகத்தில் ஓட்ட பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு பதிலாக நடிகர் படத்தை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மேற்கு வங்க மாநில பள்ளி பாட புத்தகத்தில், பிரபல ஓட்ட பந்தய வீரர் மில்கா சிங் தொடர்பான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மில்கா சிங் வாழ்க்கை தொடர்பாக 2013ல் ஒரு திரைப்படம் வெளியானது. ' பாக் மில்கா பாக்' என்ற அப்படத்தில் மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடிகர் பர்ஹான் அக்தர் நடித்து இருந்தார்.

மேற்கு வங்க பாட புத்தகத்தில் மில்கா சிங் குறிப்புகளுடன், அவரது படத்திற்கு பதிலாக நடிகர் பர்ஹான் அக்தர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி அதை சரி செய்யும்படி மேற்கு வங்க மாநில அரசுக்கு நடிகர் பர்ஹான் அக்தர் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் பதில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...