பருவநிலையில் ஏற்பட்டுள்ள, மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்து உள்ளது.
முக்கியமாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்து இருக்கிறது.
சீனாவில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகின்றனர். கடல்நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால். அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலாவதாக, தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுனாமி தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழில் வெளிட்டுயுள்ளனர். ஆகையால், பொதுமக்களால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


