நாளைய கலாம் விருது பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு!!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் துறிஞ்சிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், மாநில அளவில் ‘நாளைய கலாம்’ விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


  பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். பேச்சுப்போட்டி, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, விளையாட்டு, அறிவியல் கண்காட்சி ஆகியவற்றில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவி தீபிகா நாளைய கலாம் விருது பெற்றுள்ளார்.


  காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் முத்தமிழ் மையம் மூலம் ராமேஸ்வரத்தில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.


  மாநில அளவில் நாளைய கலாம் விருது பெற்ற மாணவி தீபிகாவை பாராட்டி ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் நினைவு பரிசுகள், சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார்.

   நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முத்துக்குமார், வெண்ணிலா, வளர்மதி, சிலம்பரசன், சத்தியவதி மற்றும் மாணவர்கள் பாராட்டினர். விருது பெற்ற மாணவி தீபிகா, தான் விருது பெற காரணமாக இருந்த அனைவருக்கும் விழா நிறைவில் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...