நமது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும் முக்கிய பங்கினை வகிப்பது சிறுநீரகம். அத்தகைய சிறுநீரகத்தை காப்பது மிகவும் முக்கியம். நமது செயலினால் கிட்னி மிகவும் பாதிக்கின்றது. இப்பொழுது ஏன் சிறுநீரகத்தில் கல் ஏற்படுகின்றது என்று பார்ப்போம் உறவுகளே.
1. குறைந்த அளவு நீர் குடித்தல்
குறைந்த அளவு நீர் அருந்துவதால் உங்களில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் கட்டியாக மாறி சிறுநீரக கல் ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றது.
2. அதிக நேரம் சிறுநீரினை அடக்கி வைத்தால்
சிறுநீர் வரும்பொழுது விரைவில் சென்று கழிக்காமல் அதிக நீரம் அடக்கி வைப்பதனால் உங்கள் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்ந்து கிட்னியில் கல் ஏற்படும்.
3. அதிகமாக உப்பினை சேர்த்தால்
உங்கள் உணவில் அதிக அளவு சோடியம் உப்பினை சேர்ப்பதனால் உங்கள் சிறுநீரகத்தில் கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே சோடியம் அளவினை குறைத்துக்கொள்ளவும் நண்பர்களே.
4.அதிக அளவு புரதம்
புரதம் மிகவும் முக்கியமான ஒன்று. அதுவே அதிக அளவில் உட்கொண்டால் உங்களுக்கு சிறுநீரக கல்லினை ஏற்படுத்தும்.
5.உடற்பருமன்
உடற்பருமன் உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும். எனவே உடற்பயிற்சி செய்து உங்கள் உடலினை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்ளுங்கள் நண்பர்களே
6. அதிக அளவு சர்க்கரை சேர்த்தால்
அதிக அளவு சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்படும். எனவே சர்க்கரை அளவினை குறைத்துக்கொள்ளவும் நண்பர்களே.
