கை கொடுத்த காவேரி – நகவெட்டியை விழுங்கிய மனிதர்



“என்னதான் காசு பணம் இருந்தாலும் நிம்மதியே இல்லையே..” – தற்போது பலரிடமிருந்து அதிகம் கேட்கப்படும் வார்த்தை இது. வசதி வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரத்திற்காக ஓடி ஓடி குடும்பத்தையும் கவனிக்காமல், தன்னையும் கவனித்துக் கொள்ளாமல், சந்தோஷமாகவும் வாழாமல் எப்படி வாழ்வதென்றே தெரியாமல் திணறுகின்றனர் இன்றைய தலைமுறையினர். பலர் விரக்தியில் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகியுள்ளது. இதன் முக்கிய காரணம் மனஅழுத்தம், மன நோய் என்றே கூறப்படுகிறது. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்குக் காரணங்களாகின்றன.

தன்னை ஏதாவது உடல்ரீதியாகத் தாக்கும் என ஒரு நபர் பயந்தாலோ, நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றைப் பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போதோ தானாகவே மன அழுத்தம் ஏற்படுகின்றது. இது மக்கள் தாங்களாகவேஅழுத்தத்தை உண்டாக்கிக் கொள்வதாகும்.

சத்தம், கூட்டம், வேலைப்பளு அல்லது குடும்ப பளு போன்ற காரணங்களாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தம்ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவைக் குறைக்கலாம்..

சரியான தூக்கம் இல்லாமை., குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் ,கோபம், பசியின்மை , குறைவான கவனம், ஞாபகமறதி, மனவியல் ரீதியான வெளிப்பாடுகள், மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு, வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்,படபடப்பான நடவடிக்கைகள் போன்ற அறிகுறிகள் இருந்தால் மன அழுத்தம்/ மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நம்முடைய குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை ஆராய்ந்தாலே பெரும்பாலான மனஉளைச்சலைத் தவிர்த்திடலாம். சமீபத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகும் பலர் தற்கொலை முடிவுகளை எடுப்பதுஅதிகமாக உள்ளது.



கடந்த ஜூலை மாதம் சேலத்தை சேர்ந்த 32 வயது உடைய மணி என்பவர், மன உளைச்சல் காரணமாக நகவெட்டியை விழுங்கியுள்ளார். வயிற்று

வலியின் காரணமாக, சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த பொழுது, எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள் நகவெட்டி இரைப்பையில் இருப்பதைக் கண்டறிந்தனர். (பெரிய நகவெட்டி என்பதால், மயக்க மருந்துகொடுத்து எண்டோஸ்கோப்பி (குடல் உள்நோக்கு கருவி) மூலம் எடுக்க முயற்சிக்கலாம் என்பதையும், அதனை எடுக்கும் பொழுது ஏற்படும் ஆபத்தினையும், அவரது உறவினர்களுக்கு எடுத்துரைத்தனர். அவரை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் Dr.S.ரவிக்குமார் மற்றும் மயக்க மருந்து நிபுணர் Dr.M.பார்த்தசாரதி அடங்கிய குழுவினர், எண்டோஸ்கோப்பி மூலம், அறுவை சிகிச்சையின்றி பெரிய நகவெட்டியை, நோயாளி மருத்துவமனைக்கு வந்த 45 நிமிடங்களில் வெளியே எடுத்துக் காப்பாற்றினர்.

மேலும் நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், விழுங்கிய நகவெட்டி வயிற்றுப் பகுதியில் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காவேரி மருத்துவர்கள் இதனை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப்பி மூலமாகவேஅகற்றியதால் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி என்றும், மருத்துவரையும், காவேரி மருத்துவமனையையும் மனதார பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

காவேரி மருத்துவமனையில் உள்ள அதி நவீன எண்டோஸ்கோப்பி மற்றும் கோலனோஸ்கோப்பி மூலம் உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல் பகுதியில் உள்ள பிரச்சினைகளை கண்டறிவதோடு, பல வியாதியை அறுவை சிகிச்சையின்றி அதன் மூலமாகவே சரி செய்யலாம் என்பதைக் காவேரி மருத்துவமனையின்  குடல் அறுவை சிகிச்சை நிபுணர் Dr.S.ரவிக்குமார் விளக்கிக் கூறினார். காவேரி மருத்துவமனையின் மீதான நம்பிக்கையும் பிரம்மிப்பும் நாளுக்கு நாள் மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது என்பது நாம் கண்கூடாக நாம் காணும்உண்மை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...