திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அரசாணை வெளியீடு

*திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில்
அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது*

*திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்*


*இந்நிலையில் கலைஞர் கடந்த 7-ம் தேதி காலமானார்*


*கலைஞர் மறைவு குறித்து தகவல் சட்டசபை செயலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது*


*இதனையடுத்து கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவிப்பு ஆணை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ஆணை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது*


 *எனவே அந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இனி மேற்கொள்ளும், அதிமுக எம்எல்ஏ. ஏ.கே. போஸ் மறைவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக அன்மையில் அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...