இந்தியாவில் வயதை விட குறைவான உயரம் உள்ள குழந்தைகளில் 66 விழுக்காட்டினர் குறைவான வருவாயே ஈட்டுவதாக உலக வங்கியின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறியுள்ளதாவது:
,இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்கள் தொகையில் மூன்றில் இருவர் 13 விழுக்காட்டிற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுகின்றனர்.. இதற்கு காரணம் அவர்கள் உயரம் குன்றி பிறந்தததுதான்.
வயதை விட குறைவான உயரம் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மோசமான விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அவர்களின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதால் புரிந்து கொள்ளும் ஆற்றலும், சமூகம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களும் குறைவாகவே உள்ளன.இந்த திறன்கள் குறைவாக இருப்பதால் அவர்களால் குறைவாகவே வருவாய் ஈட்ட முடிகிறது. உலக அளவில் இது அதிகமான அளவாகும்.
உலகளவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உயரம் குன்றி இருப்பது பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் பிரச்சினை மட்டுமின்றி பல கண்டங்களிலுள்ள பிரச்சினையாகவும் மாறி வருகிறது.
உலக அளவில் 140 நாடுகளை ஆய்வு செய்யும்போது உயரம் குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் பங்களாதேஷ் (73 விழுக்காடு)ஆப்கானிஸ்தான்(67 விழுக்காடு)இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இந்நிலைமை 2014இல் சற்று மாறினாலும் இந்தியாவில் 3இல் 1 குழந்தை உயரங்குன்றிய வளர்ச்சியுடைய குழந்தையாகவே உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
