நியூயார்க்: ஒரு டிவிட் காரணமாக டெஸ்லா நிறுவன சிஇஏ எலோன் மஸ்க் தன்னுடைய பதவியை இழந்துள்ளார். மேலும் 148 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் நிலைக்கும் சென்று இருக்கிறார்.
பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், டெஸ்லா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகின் முன்னணி பேட்டரி கார்களில் இதுவும் ஒன்று.
இதில் ஒரு காரைத்தான் அவர் சில மாதம் முன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினார். இந்தநிலையில் அந்த நிறுவனத்தில் இவர் போட்ட டிவிட் ஒன்றின் காரணமாக பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
என்ன
என்ன டிவிட் செய்தார் .
மக்கள் பங்குகளை வைத்து இயங்கி கொண்டு இருக்கும் இந்த டெஸ்லா நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்ற போகிறேன்.
இதற்காக 420 மில்லியன் தயார் என்று டிவிட் செய்து இருந்தார். அதாவது நிறுவனத்தை மொத்தமாக தனியார் நிறுவனமாக மாற்ற போவதாக கூறி இருந்தார். இது அந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
பிரச்சனை
என்ன பிரச்சனை ஆனது
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வெகுவேகமாக சரிந்தது. சென்ற ஆகஸ்ட் மாதம் முழுக்கவே பங்குகள் தொடர்ந்து சரிந்தது. இதனால் பல நூறு மக்கள் தங்கள் பங்குகளை இழந்து நஷ்டங்களை சந்தித்தனர். இதனால் எலோன் மஸ்க்கிற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது.
அபராதம்
அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது
இதையடுத்து வழக்கு விசாரணையின் முடிவில் இவருக்கு 148 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை உடனடியாக டெஸ்லா நிறுவனத்திற்கு இழப்பீட்டு தொகையாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவரது பதவியும் பறிபோய் உள்ளது.
பதவி
பதவியும் போனது
ஆம், அவரின் சேர்மேன் பதவி பறிபோய் உள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து சிஇஓவாக நீடிப்பார். அவரிடம் வாங்கிய இழப்பீட்டு தொகை, அந்த டிவிட் காரணமாக இழப்பை சந்தித்த பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
