1765 எம்பி, எம்எல்ஏக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!


டெல்லி: எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டாலே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான பென்ச் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.


இப்போது
இப்போது என்ன நடைமுறை
இப்போதும் எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பல முக்கிய அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


எத்தனை

மொத்தமாக சட்டமன்றம், நாடளுமன்றம் என்று சேர்த்து இந்தியா முழுக்க 4896 எம்எல்ஏக்கள், மற்றும் எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 36 சதவிகிதம் அதாவது 1765 பேர் குற்றவழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள். மொத்தமாக இவர்களுக்கு எதிராக 3045 வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. இதில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

என்ன
என்ன ஆகும்

இந்த நிலையில் இந்த மனுவில் கோரிக்கை வைத்து இருப்பது போல சட்டம் மாற்றப்பட்டால், இந்த 1765 எம்பி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் இவர்கள் தேர்தலிலும் போட்டியிட முடியாது. இவர்களின் மொத்த எதிர்காலமும் இந்த வழக்கின் தீர்ப்பில்தான் உள்ளது.

தீர்ப்பு
இன்று தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளின் பென்ச் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன் அளிக்க இருக்கும் மிக முக்கியமான தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...