ஆசிரியர் தினத்தில் என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்!!!

அன்னை தந்தைக்கு அடுத்ததாய்
ஆண்டவனாய் போற்றப்படுபவன்!
எண்ணையும் எழுத்தையும் அறிவித்து

என்னை ஒளிரச் செய்தவன்!

கரும்பலகை முன் தோன்றி
கதைகள் பல கூறிய கதாநாயகன்!
கைப்பிடித்து கற்பித்து - என்
கைக்குலுக்கி வளரச் செய்தவன்!

அகரம் கற்பித்து - நான்
சிகரம் நோக்கி பயணிக்க
என்னை விட எனக்காய்
எந்நாளும் கற்றவன்!

அந்நிய மொழி ஆங்கிலத்தையும்
அன்னை மொழியாய் போதித்து
அகிலம் முழுக்க வலம் வர
அடித்தளம் அமைத்தவன்!

ஏணி போல் இருந்து - என்னை
ஏற்றம் பெற செய்து
தன்னிலையில் மாறாமல் - இன்றும்
தரணிக்காக உழைப்பவன்!

எத்தனை எத்தனை இடர்கள்
எனினும் தளராது உன் உள்ளம்!
எத்தனை எத்தனை முறைகள்
என்றாலும் சளைக்காது உன் திறமை!

மாணவனின் மனம் அறிந்து
மாண்புடன் கற்பித்து
மாற்றறங்கள் நிகழக் கண்டு
மாபெரும் மகிழ்ச்சி கொண்டவன்!

மெழுகைப் போல் தனை உருக்கி
கழுகைப் போல் விழி கூராக்கி
தன் பிள்ளையைக் காட்டிலும்
தன் மாணவனையே வளமாக்கியவன்!

போற்றினாலும் தூற்றினாலும் - என்
ஏற்றத்திற்காகவே உழைத்தவன்!
கடிந்து கொண்டு திட்டினாலும்
கவனமாய் எனைத் தீட்டியவன்!

தன்னலம் போற்றாமல்
தன்னை தினமும் அர்பணித்து
நீ போற்றிய அறப்பணியில்!
நானும் இன்று உன் பணியில்!


ஆசிரியர் தின வாழ்த்துகளுடன்
தங்கமணிகண்டன்,
இ.நி.ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி, கீழ்பாலூர்,
கலசபாக்கம் ஒன்றியம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...