சிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது

விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில்,
சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடந்த, ஆசிரியர் தினம் மற்றும் கல்வியறிவு தின விழாவிற்கு, சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 45 ஆசிரியர்களை பாராட்டி, இ.எஸ்.கல்வி அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு, நேஷன் பில்டர் விருது வழங்கி, சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன், ரோட்டரி நிர்வாகிகள் குமரன், இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.


முன்னாள் உதவி ஆளுநர்கள் தியாகராஜன், சதீஷ் மற்றும் ராஜுலு, தனசேகரன், பாலசுப்ரமணி, இளங்கோவன், பழனி, ஞானப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.சங்க செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...