பைக், காரில் பயணிப்போர்கள் கவனிக்க.. சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு!

சென்னை: டூவீலரில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில்,
பைக்கில் பயணிக்கும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.கே.ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் முறையாக பின்பற்றப்படுவதில்லை, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை என்று நீதிபதிகள் நேற்று கருத்து தெரிவித்திருந்தனர்.


இன்று விரிவான உத்தரவை நீதிபதிகள், பிறப்பித்துள்ளனர். அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இதுதொடர்பாக, பிறப்பித்த அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பைக்கில் முன்னமர்ந்து செல்பவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இந்த அரசாணையை அமல்படுத்தியது குறித்து அக்டோபர் 23ஆம் தேதி அறிக்கையாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஹைகோர்ட் உத்தரவிட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...