தேநீரும் எரிமலைகளும்!



அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள்:

1. குத்தாபி (Kutabi) எனும் தோசை போன்ற உணவுதான் (pancakes) அஜர்பைஜான் நாட்டின் மிக விருப்பமான உணவு. அவற்றுள் பூசணிக்காய், காய்கறி, இறைச்சி என்று ஏதாவது ஒன்றை வைத்து செய்வார்கள்.

2. அஜர்பைஜான் நாட்டிலுள்ள Azokh என்ற குகையில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஆயுதங்களும் பொருட்களும் கிடைத்துள்ளன. அந்தக் குகையிலுள்ள ஆறு அறைகளிலும், பல தொல்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.

3. அஜர்பைஜான் நாட்டில் எந்த ஒரு நிகழ்வும் தேநீர் அருந்தாமல் முடிவதில்லை. தேநீரில் எலுமிச்சை, புதினா, ரோஸ் வாட்டர் என்று ஏதாவது ஒரு வாசனைப் பொருள் கலக்கப்பட்டுப் பரிமாறுவார்கள்.

4. ஒரு திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை நிகழ்ந்தால், அங்கு பரிமாறப்படும் தேநீர் தட்டை வைத்தே என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். சர்க்கரை இல்லாமல் தேநீர் தட்டு வந்தால், இன்னும் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று பொருள்; சர்க்கரை இருந்தால், அனைத்தும் சுபம்!

5. அஜர்பைஜானின் தேசிய விலங்கு - கரபக் குதிரை (Karabakh Horse). உலகின் மிகப் பழமையான இனங்களில் இக்குதிரையும் ஒன்று.

6. அஜர்பைஜான் நாட்டின் நாணயத்தின் பெயர் மனட். (Manat).

7. அஜர்பைஜான் நாட்டின் தலைநகரம் - பகு (Baku).

8. னெஃப்ட் தஸ்லாரி Neft Daslari என்ற இடத்தில் எண்ணெய் கிடங்கு தோண்டப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டது. இப்போது அது ஒரு நகரமாகவே மாறியிருக்கிறது.

9. உலகில் அதிகமான மண் எரிமலைகள் (Mud volcanoes) கொண்ட நாடு அஜர்பைஜான் - 400 எரிமலைகள்.

10. அஜர்பைஜான் நாட்டில், பிரெட் கெட்டுப்போனால் அதைக் குப்பையில் போட மாட்டார்கள். மாறாக அவற்றைத் தனியாகக் கட்டி தொங்க விடுவார்கள். உணவுப் பொருளுக்குக் கொடுக்கப்படும் மரியாதையாக அது பார்க்கப்படுகிறது. தரையில் பிரெட் விழுந்தால், அதை எடுத்து மன்னிப்பு கேட்கும் விதமாக முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் வழக்கம்.

- ஆஸிஃபா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...