கரடிகள் பற்றிய சில முக்கியத் தகவல்கள்:
1. பல பாலூட்டிகளால் நிறங்களைக் காண முடியாது. ஆனால், கரடிகளால் வண்ணங்களைக் காண முடியும்.
2. Giant Panda என்பது ஒரு வகைக் கரடிதான்.
3. நாய்களை விடவும் அதிக மோப்ப சக்தி உள்ளவை கரடிகள்.
4. பனிக்கரடிகளின் வெண்ணிறத் தோல் முடிக்குக் கீழ், அவற்றுக்குக் கறுப்பான தோல் இருக்கும்.
5. பனிக்கரடிகளின் கல்லீரலை மனிதர் சாப்பிட்டால் இறந்து போய்விடுவார்கள். மனித உடலால் செரிமானம் செய்ய முடியாத அளவு வைட்டமின் ஏ நிரம்பியவை அவை.
6. பனிக்கரடிகள், பனிக்கட்டிகளில் தங்கள் இரையை 20 மைல்கள் தூரத்திலேயே கண்டுபிடித்துவிடும்.
7. அண்டார்ட்டிக்காவில் பனிக்கரடிகளே கிடையாது; ஆர்க்டிக்காவில் மட்டுமே வாழ்கின்றன.
8. பனிக்கரடிகளால் மூச்சுவிடாமல், 60 மைல்கள் வரை நீந்த முடியும்.
9. கரடிகளுக்கு மிகப் பிடித்தமான மரங்கள் என சில மரங்கள் இருக்குமாம். பல மைல் தூரம் நடந்து அந்த மரத்தில், முதுகைத் தேய்த்துவிட்டுப் போகுமாம்!
10. கரடிகள் பொதுவாகவே தனிமையில் வாழத்தான் விரும்பும். இனப்பெருக்கக் காலத்திலும், தாயுடன் வாழும் காலத்தில் மட்டுமே அவை இணைந்து வாழும்.
- ஆஸிஃபா
