நர்சிங்கிற்கு, 'நீட்' கிடையாது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்'
தேர்வு அடிப்படையில் நடைபெறாது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்*


*சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தமிழகம் - புதுச்சேரி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான, 'மெட்ரனலைன் - 18' என்ற, கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது:தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் நிலைப்பாடு*


*எனவே, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது.இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு, சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்*


 *தேவைப்பட்டால், முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...