பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை!


தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று (செப்டம்பர் 15) முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக, கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட அரசு அலுவலங்களிலும் சில கட்டுப்பாடுகளுடன் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்யப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத பள்ளி என்ற பெயர்ப் பலகை வைக்க வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பல இடங்களில் மாற்றுப் பொருட்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். உணவு விடுதிகள், கடைகள் என்று பல்வேறு இடங்களில் மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...