அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட கோரிக்கை

நாமக்கல்: அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்
தமிழில் கையெழுத்திட வலியுறுத்தி, கலெக்டர் ஆசியா மரியத்திடம், மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்*

*அதன் விபரம்: தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழிலேயே இட வேண்டும். ஆங்கிலம் தமிழர்களை மொழியால், உணர்வால், எண்ணத்தால் அடிமைப்படுத்துகிறது*


 *மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடு, கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகை, முத்திரைகள் உள்ளிட்ட அனைத்தும், தமிழிலேயே அமைத்தல் வேண்டும்; அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டுமென்று, 1978 ஜூன், 21 பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...