உடல் எடையை குறைக்க ஏழு நாள்கள் செய்ய வேண்டிய டயட் முறை அட்டவணை!


உடல் பருமன் எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய ஒரு பரவலான பிரச்சனையாகவே உள்ளது.

உடல் பருமனை குறைக்க பலரும் பல டயட் முறையை செய்து வருகின்றனர். மேலும் கீழே உள்ள டயட் முறையை ஒவ்வொரு நாளும் பின்பற்றினாலே போதும் உடலில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முதல் நாள்

முதல் நாள் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழத்தை தவிர மற்ற எல்லாவிதமான பழங்களையும் சாப்பிடலாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.



இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் முழுவதும் பச்சையான காய்கறிகளையோ அல்லது வேக வைத்த காய்கறிகளையோ சாப்பிட்டாளே போதும். உருளைக் கிழங்கை காலையில் மட்டும் சாப்பிட்டால் போதும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் காய்கறிகள் மற்றும் பழங்கள் இரண்டையும் சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழத்தையும் காய்கறிகளில் உருளைக்கிழங்கையும் தவிர்த்தல் வேண்டும்.



நான்காம் நாள்

நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். மேலும் மூன்று டம்ளர் பால் மற்றும் ஆறு முதல் எட்டு வாழைப்பழத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.



ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ பிரியர்கள் அசைவ உணவு எடுத்து கொள்ளலாம். சைவ பிரியர்கள் சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஆறாம் நாள்

ஆறாம் நாள் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். மேலும் பழங்களின் சாறுகள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.



ஏழாம் நாள்

ஏழாம் நாள் பழுப்பு அரிசி சாதம், பழச்சாறு, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...