நமது உடம்பில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த பொருட்களை ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஒழிக்க வேண்டுமானால் அதற்கு பெருங்குடல் சுத்திகரிக்கப்பட வேண்டும். கழிவுகள் மற்றும் கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெருங்குடலிலேயே தங்கி நிற்கும்.
பெருங்குடலைச் சுத்திகரிப்பதன் மூலம் நமது உடல் சுத்திகரிக்கப்படும் பெருங்குடலை சுத்திகரிப்பது பற்றி கீழே பார்ப்போம்.
இதற்குத் தேவையான பொருட்கள்:
1. தூய்மையான தேன்
2. ஆப்பிள் சைடர் வினிகர்
3. 10 அவுன்ஸ் தண்ணீர்
செய்முறை:
முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் போத்தலை எடுத்து அதனை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 10 அவுன்ஸ் தண்ணீரை எடுத்து அதில் இரண்டு மேசைக் கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் இரண்டு மேசைக் கரண்டி தேன் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்தக் கலவையை ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பெருங்குடல் சுத்திகரிக்கப்பட வேண்டும் என நினைக்கும் போது இந்த கலவையை அருந்தலாம். மேலும் கழிவறைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலே கூறியபடி கலவையை பருகி வந்தால் பெருங்கடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு நம் உடல் பாதுகாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
