சிறுவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த வினோத தண்டனை!


சிறுவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த வினோத தண்டனை!
தகராறு வழக்கில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டுமென்று நூதன தண்டனை விதித்து திருவண்ணாமலை சிறார் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாத தகராறு கைகலப்பானது. இந்தத் தகராறில் மூன்று பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தாக்குதல் நடத்திய 6 சிறுவர்கள் மீது புகார் கொடுத்ததன் அடிப்படையில், புதுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி விக்னேஷ் பிரபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாக்குதல் நடத்திய 6 சிறுவர்களும் செங்கம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கூறும் பணியை செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 19ஆம் தேதிவரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாள்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அதன் பேரில் செங்கம் அரசு தலைமை மருத்துவர் ராமநாதன் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள முள் புதர்களை வெட்டி அகற்றும் பணியில் 6 சிறுவர்களும் நேற்று முதல் (செப்டம்பர் 20) ஈடுபட்டுவருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...